ஐஎஸ்ஐஎஸ்யை விட மிக மோசமான அமைப்பு!: ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேட்டி..!!

டெல்அவிவ்: ஹமாஸ் படையினர் நாஜிப்படையினராக மாறியுள்ளனர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே, காசாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொதுமக்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்தார். பிரத்யேக ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் அதிபர் ஜோ பைடன் டெல்அவிவ் சென்றடைந்தார். அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வரவேற்றார். ஜோ பைடன் வருகையால் டெல் அவிவ் நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்அலிவ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐஎஸ்ஐஎஸ்யை விட மிக மோசமான அமைப்பு ஹமாஸ். ஹமாஸ் படையினர் தற்போதைய நாஜிப்படைகளாக மாறி இருக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். அமெரிக்காவின் ஒத்துழைப்பிற்கும் உதவிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். அக்டோபர் 7 முதல் ஹமாஸ் படையினர் இதுவரை 1400 இஸ்ரேலியர்களை கொன்றுள்ளனர். ஹமாஸ் அமைப்பு குழந்தைகளை கூட கொன்றுள்ளது என பைடனிடம் நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார்.

ஐஎஸ் அமைப்பின் பாதையை அப்படியே ஹமாஸ் அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்ற நண்பனாக துணை நிற்கிறது. இந்த சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்ததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார். மேலும் ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அதை பார்க்கும் போது அந்த தாக்குதல் வேறு சிலரால் நடத்தப்பட்டதாக அறிகிறேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை