ஜப்பானின் புதிய பிரதமராக இஷிபா தேர்வு


டோக்கியோ: ஜப்பானில் பிரதமராக இருந்த பியூமோ கிஷிடாவிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்தியது. இந்த உட்கட்சி தேர்தலில் 2 பெண்கள் உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இதில் 3 பேர் இறுதி பட்டியலுக்கு தேர்வானார்கள். இவர்களில் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான ஷீகெரு இஷிபா கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் நாட்டின் புதிய பிரதமராக இஷிபா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

சாலிகிராமத்தில் டேட்டிங் அப் மூலம் பாலியல் தொழில் நடத்திய அசாம் வாலிபர் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பாஜ நிர்வாகிக்கு ஐகோர்ட் கண்டிப்பு