ஈஷா மையம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்குகளை சட்டப்படி விசாரிக்க மாநில காவல்துறைக்கு எந்த தடையும் இல்லைஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே ஈஷா யோகா மையத்தின் மீதான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்திட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வழக்கினை நேர்மையாகவும் துரிதமாகவும் விசாரித்து உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை

இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு