ஈராக்கில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் உயிரிழப்பு.. 150 பேர் படுகாயம்.. மணமக்களும் பலியான பரிதாபம்!!!

பாக்தாத் : ஈராக்கில் திருமண விழாவில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 113 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ஹம்தநியா நகரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருந்தது. விழா மண்டபத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட போது, ஏற்பட்ட தீப்பொறி, இருப்பு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதையடுத்து பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. பலூன்களை நிரப்ப வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்களை வெடிகுண்டுகள் போல வெடித்து சிதறியது. இதனால் திருமண மண்டபத்தின் பெரும் பகுதி சேதம் அடைந்தது.

இந்த கோர விபத்தில் மணமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 150 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய அலங்காரப் பொருட்களை கொண்டு விழா மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு