இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியா 298/8

ராஜ்கோட்: ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணியுடனான இரானி கோப்பை போட்டியில், இதர இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்துள்ளது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (5 நாள்), டாஸ் வென்ற இதர இந்தியா முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்புக்கு 298 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). தொடக்க வீரர் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 72 ரன் (164 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். மயாங்க் அகர்வால் 32, கேப்டன் ஹனுமா விஹாரி 33, ஸ்ரீகர் பரத் 36, ஷாம்ஸ் முலானி 32 ரன் எடுத்தனர். சவுரவ் குமார் 30, நவ்தீப் சைனி 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் பார்த் பட் 4, தர்மேந்திரசிங் ஜடேஜா, யுவராஜ்சிங் டோடியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர் இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!