ஈரான் அதிபர் தேர்தலில் 2ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு

துபாய்: ஈரான் அதிபரை தேர்ந்தெடுக்க நடந்த 2ம் சுற்று வாக்குப்பதிவில் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஈரான் அதிபராக பதவி வகித்து வந்த இப்ராஹிம் ரைசி கடந்த ஜூன் 19ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 28ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் மசூத் பெசஸ்கியான் 42.5 சதவீத வாக்குகளும், சையது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளும் பெற்றனர். ஈரான் சட்டப்படி தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் பெற வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் யாரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை. இதையடுத்து ஈரான் சட்டப்படி முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களுக்கு இடையே 2ம் சுற்று தேர்தல் நடத்தப்படும். அதன்படி நேற்று நடந்த 2ம் சுற்று வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணும் பணி முடிவுற்று இன்று மதியம் முடிவுகள் வெளியாக உள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை