ஈரான் நிலக்கரி சுரங்க பலி எண்ணிக்கை 49ஆக அதிகரிப்பு


தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 540 கி.மீ. தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனியன்று வெடிவிபத்து ஏற்பட்டது. சுமார் 70 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 49 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்களில் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட காயங்கள் ஏதுவும் இல்லை. எனவே வெடிவிபத்துக்கு முன்னதாக வாயு கசிவினால் தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. எனவே சுரங்கத்திற்குள் இருந்த அனைத்து தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Related posts

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சு