ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து வெடி விபத்தில் 34 பேர் பலி

தெஹ்ரான்: தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 540 கி.மீ. தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு 70 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கத்துக்குள் மீத்தேன் வாயு கசிந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பணியாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு