இகியூபி எலக்ட்ரிக் எஸ்யுவி

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது இகியூபி எலக்ட்ரிக் எஸ்யுவியின் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் இகியூபி 250பிளஸ் 7 சீட்டர் மற்றும் இகியூபி 350 4 மேட்டிக் 5 சீட்டர் என 2 வேரியண்ட்கள் உள்ளன. புதிய கிரில் பேனல், ரிவைஸ்ட் பம்பர்கள், எல்இடி டெயில் லாம்ப்கள், 70.5 கிலோவாட்அவர் பேட்டரி உள்ளது. இகியூபி 250 பிளஸ் வேரியண்டில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 385 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் இகியூபி 350 4 மேட்டிக் பியூச்சரின் முன்புறம் மட்டும் ஒரு இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இடம் பெற்றுள்ளன. இவை இணைந்து அதிகபட்சமாக 292 எச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இரண்டு வித பேட்டரி தேர்வுகளில் கிடைக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் பேட்டரி திறனுக்கு ஏற்ப அதிகபட்சமாக 447 கி.மீ தூரம் வரை அல்லது 535 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். துவக்க ஷோரூம் விலை சுமார் ₹70.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா