ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு பலம் வாய்ந்த அணியானது சிஎஸ்கே: ஆகாஷ் சோப்ரா பேட்டி

மும்பை: ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த 19ம் தேதி துபாயில் நடந்தது. இந்த ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணியானது பலம் வாய்ந்த ஒரு அணியாக மாறியுள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,
சிஎஸ்கே அணியானது ஷர்துல் தாக்கூர் மற்றும் ரச்சின் ரவீந்திராவை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தது. இதன் காரணமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கும் அளவிற்கு சிஎஸ்கே அணியிடம் பர்ஸ் தொகை இருந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 2 சதங்கள் அடித்தார். வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் டேரில் மிட்செல் தாக்கத்தை ஏற்படுத்துவார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள மொயின் அலி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவருக்கு சரியான மாற்று வீரராக டேரில் மிட்செல் இருப்பார்.

சிஎஸ்கே அணியில் இடம் பெறக் கூடிய 4 வெளிநாட்டு வீரர்களில் டெவான் கான்வே, டேரில் மிட்செல், மகீஷ் தீக்‌ஷனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் இடம் பெறுவார்கள். இல்லையென்றால் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஷ்தாபிஜூர் ரஹ்மானை பயன்படுத்தலாம்.

சிஎஸ்கே அணியில் அதிகளவில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிளேயிங் 11ஐ கூட வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகளவில் இருப்பது போன்று கூட மாற்றிக் கொள்ளலாம். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோர் இருக்கும் நிலையில் ஆல்ரவுண்டர்களாக டேரில் மிட்செல், முஷ்தாபிஜூர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலமாக ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணியானது பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது என்றார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி