பணத்தை முதலீடு செய்கிறார்கள் இந்திய குடும்பங்கள் பணகஷ்டத்தில் இல்லை: தலைமை பொருளாதார ஆலோசகர் சொல்கிறார்

புதுடெல்லி: பொருளாதார இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியதாவது: இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டால் நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்து உள்ளது. தனியார் முதலீடுகள் 2021ம் ஆண்டுக்கு பிறகு தற்போது உயர்ந்து வருகிறது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருவமழை பெய்து வருவதால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இருப்பினும் இந்த நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். இந்திய குடும்பங்கள் தற்போது பணக்கஷ்டத்தில் இல்லை. அவர்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். இவ்வாறு கூறினார்.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு