திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்… சிபிஐ கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தகவல் மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதேநேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது; திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் நியமிக்கும் அதிகாரிகள் 2 பேர் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெறுவர். ஆந்திர மாநில காவல் அதிகாரிகள் 2 பேரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க வேண்டும். லட்டு விவகாரத்தில் ஒன்றிய, மாநில அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் கடவுளை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று தெரிவித்தது.

Related posts

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்