நான் என் கணவரை உருவாக்கியது போல் என் மகளால் ரிஷி சுனக் பிரதமரானார்: இன்போசிஸ் நிறுவனரின் மனைவி சுதா மூர்த்தி பேட்டி

லண்டன்: இங்கிலாந்து பிரதமரும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக்கின் மாமியாரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், இன்போசிஸ் டெக் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மனைவியும், இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவருமான சுதா மூர்த்தியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதில் அவர் கூறுகையில், ‘எனது மகள் அக்ஷதா மூர்த்தியால் தான் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமரானார். அவர் பிரதமர் ஆவதற்கு எனது மகள்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

எனது மகளால் (அக்ஷதா மூர்த்தி) ரிஷி சுனக் இங்கிலாந்தின் இளம் பிரதமர் ஆனார். நான் எனது கணவரை தொழிலதிபராக மாற்றினேன். எனது மகள் தனது கணவரை இங்கிலாந்தின் பிரதமராக்கினார். ஒரு மனைவி என்பவர், தன் கணவனின் தலைவிதியை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை எனக்குள் பார்க்கிறேன்’ என்றார். கடந்த 2009ம் ஆண்டு அக்ஷதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார். தற்போது உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக அக்ஷதா மூர்த்தி கருதப்படுகிறார். சுதா மூர்த்தியை பொருத்தமட்டில், பல மேடைகளில் தன்னம்பிக்கை கருத்துகளை கூறி மக்களிடம் செல்வாக்கு பெற்றவார் ஆவார்.

Related posts

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை