கட்டாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர் பணிக்கு நேர்முகத்தேர்வு

திருப்பரங்குன்றம்: மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019, ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை 2023ம் ஆண்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையிலும், இதுவரை கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கொள்ளும் நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டது. இருப்பினும், அந்த டெண்டர் பணிகளும் இதுவரை முடிவுக்கு வராமல் உள்ளது. இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நேற்று நடைபெற்றது.

தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் நிர்வாக அலுவலகத்தில், அதன் இயக்குநர் அனுமந்தராவ் தலைமையில் நேர்முகத் ேதர்வு நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பலரும் நேரடியாக கலந்து கொண்டனர். ஒரு சில பணியிடங்களுக்கான நபர்கள், ஆன்லைன் மூலமாக பங்கேற்றனர். எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டிட பணிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு இறுதி அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி