தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி-க்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஓரே நாளில் இரு அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிவில் பொறியியல் பாடத்திற்கான தேர்வும், உள்ளாட்சி பொறியியல் சார்ந்த பணிக்கான தேர்வும் அக்.21ல் நடைபெறுகிறது. 2 தேர்வுகளும் ஒரே கல்வி தகுதியைக் கொண்டவை என்பதால் ஒரு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும், குழப்பங்களை தவிர்க்க இனி டிஎன்பிஎஸ்சி மூலமே ஆள்தேர்வு நடத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3ம் நாள் பிரமோற்சவம் கிவி, அன்னாசிப்பழங்களால் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம்

கரூர் மாவட்டம், குளித்தலையில் சைபர் குற்றம், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரத்தில் டூவீலர் சாகசத்தில் இளைஞர்கள்…அசுர வேகத்தில் பஸ்கள்