நிதி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விரைவில் விசாரணை: போலீசார் திட்டம்

சேலம்: பட்டியலின மாணவர்களுக்கான நிதியில் முறைகேடு செய்த புகாரில் சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நியமனம், கொள்முதலில் ஏராளமான முறைகேடுகளும், ஊழல்களும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே பல்கலை.யில் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசால் ஒதுக்கிய நிதியில் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

நிதி முறைகேடு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். மாணவர்கள் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சேலம் போலீசுக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. பட்டியலின மாணவர்களுக்கான நிதியில் முறைகேடு செய்த புகாரில் சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நிதி முறைகேடு புகார் அளித்த மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்காக இன்று காலை சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் மாணவர்கள் ஆஜராக உள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை

காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி

மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு