பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 2 பேருக்கு தலா ரூ.16 லட்சத்தில் சைக்கிள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் 2 பேருக்கு தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 2 சைக்கிள்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி முகாம்களில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் எஸ்.தன்யதா மற்றும் கவுகாத்தி முகாமில் பயிற்சி பெற்று வரும் அ.ஜெய் ஜியோட்ஷ்னா ஆகிய இருவருக்கும் பயிற்சியின் பயன்பாட்டிற்காக தலா ரூ.16 லட்சம் வீதம் மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான நீண்ட தூரம் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2 மிதிவண்டிகளை “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை” நிதியிலிருந்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது