சர்வதேச சந்தையில் குறைந்து வரும் தேவை 50ஆயிரம் ஊழியர்களுக்கு 10 நாள் கட்டாய விடுப்பு: சூரத் வைர நிறுவனம் அறிவிப்பு

சூரத்: குஜராத் மாநிலத்தின் சூரத்தில் இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தி நிறுவனமானது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவர் வல்லபாய் லக்கானி கூறுகையில்,\\” எங்களது நிறுவனத்தின் 50 ஆயிரம் ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளோம். அனைத்து ஊழியர்களுக்கும் இந்த காலத்திற்கான சம்பளம் வழங்கப்படும்.

மந்த நிலை காரணமாக இந்த விடுமுறையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சர்வதேச சந்தைகளில் வைரங்களுக்கான தேவை குறைந்து வருகின்றது. இது வைரதொழிலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஊழியர்களுக்கு 10 நாட்கள் கட்டாய விடுமுறையாகும். தொழிலாளர்கள் யதார்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் நாங்கள் முன்கூட்டியே இதனை அறிவித்துள்ளோம்” என்றார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு