சர்வதேச கிரிக்கெட் திரிமன்னே ஓய்வு

கொழும்பு: இலங்கை அணி பேட்ஸ்மேன் லாகிரு திரிமன்னே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010ல் மிர்பூரில் இந்திய அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான திரிமன்னே (33 வயது), இலங்கை அணிக்காக 44 டெஸ்டில் 2088 ரன் (அதிகம் 155*, சராசரி 26.43, சதம் 3, அரை சதம் 10), 127 ஒருநாள் போட்டியில் 3194 ரன் (அதிகம் 139*, சராசரி 34.71, சதம் 4, அரை சதம் 21) மற்றும் 26 டி20ல் 291 ரன் எடுத்துள்ளார். 2014ல் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்ற தொடர் உள்பட 3 டி20 உலக கோப்பையிலும், 2 ஒருநாள் உலக கோப்பையிலும் விளையாடி உள்ள திரிமன்னே, 5 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா