சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல்: ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி

சார்ஜா: ஆப்கானிஸ்தான்-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 33.3 ஓவரில் 106 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக வியான் முல்டர் 52 ரன் அடித்தார். ஜோர்ன் ஃபார்டுயின் 16, டோனி டி ஜோர்ஜி11, கைல்வெர்ரின்னே 10 ரன் அடிக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். ஆப்கன் பவுலிங்கில்
ஃபசல்ஹக் பாரூக்கி 4, கசன்பர் 3, ரஷித்கான் 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குல்பதின் நைப் நாட் அவுட்டாக 34, அஸ்மத்துல்லா உமர்சாய் 25 ரன் அடித்தனர். ஃபசல்ஹக் பாரூக்கி ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஒயிட்பால் கிரிக்கெட்டில் (ஒன்டே, டி.20) ஆப்கன் முதன்முறையாக தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி உள்ளது. இதற்கு முன் மோதிய 2 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டியில் தென்ஆப்ரிக்கா தான் வென்றிருந்தது. மேலும் ஒயிட்பால் கிரிக்கெட்டில் தென்ஆப்ரிக்காவை முதன்முறையாக நேற்று ஆப்கன் ஆல்அவுட் செய்தது. இந்த வெற்றி மூலம் ஆப்கன் 1-0 என முன்னிலை வகிக்க 2வது போட்டி நாளை நடக்கிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்