சர்வதேச விளையாட்டு வீரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் சார்பில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன்பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள், பங்கேற்றவர்கள்)

* கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள்,

* காமன்வெல்த் விளையாட்டு

* ஆசிய விளையாட்டு

* சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.

* 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF-ன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்

* 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF-ன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்

* சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருத்தப்படும். 31.10.2023-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

“நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை வரும் 17ம் தேதி தென்காசியில் இருந்து தொடங்குதாக சசிகலா அறிவிப்பு!!