சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வில் மது: அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வில் மது பறிமாற உரிமம் தரும் வகையில் விதிகளை திருத்த ஒப்புதல் பெறப்பட்டதா?, விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மதுபானம்( உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு மனு அளித்திருந்தார். அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்