உள்ஒதுக்கீடு பிரச்னையில் முழுஅடைப்பு உ.பி, பீகார், ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுடெல்லி: பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ‘தலித் மற்றும் ஆதிவாசி’ அமைப்புகள் நேற்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தின. இதனால் பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளாவில் ஆங்காங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பீகாரில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. பல இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. வாகனங்கள் மறிக்கப்பட்டன. கோபால்கஞ்ச் பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்ற பஸ்சை தீவைத்து கொளுத்தும் முயற்சி நடந்தது. அவர்கள் டயரை கொளுத்திய போது போலீசார் விரட்டியடித்தனர். ஜார்க்கண்ட், ராஜஸ்தானிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உபியிலும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

Related posts

களையிழந்த ஓணம் பண்டிகை; சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறவில்லை: பிரதமர் மோடியை மாணவர் சமுதாயம் மன்னிக்காது என செல்வப்பெருந்தகை ஆவேசம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் – மம்தா பானர்ஜி அறிவிப்பு