கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு இடைக்கால தடை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ெடல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ெடல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து அமலாக்கத் துறை ெடல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இன்று பிற்பகல் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அப்போது நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில், கெஜ்ரிவால் இன்று விடுவிக்கப்படுவாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

 

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி