டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைதுசெய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். 90 நாட்களுக்கு மேல் கெஜ்ரிவால் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை கருத்தில் கொண்டு டெல்லி முதலமைச்சருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. பதவி விலக வேண்டுமா அல்லது முதலமைச்சராக தொடர வேண்டுமா என்ற முடிவை கெஜ்ரிவாலிடமே விட்டு விடுகிறோம். மேலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் பிரிவு 19-ன்படி கைதுசெய்யப்பட்டதே தவறு என்ற வாதம் குறித்து விரிவான அமர்வு விசாரிக்க  நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Related posts

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே

ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் இறங்கி குளிக்க தடை விதிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை