உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: உளவுத்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள், வரும் 11ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை நுண்ணறிவுப்பிரிவில் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 நான்கு சக்கர வாகனம், ஒரு ஆட்டோ, 17 பைக்குகள் என மொத்தம் 27 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யும்போது பெறப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் வரும் 11ம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

ஏலத்தில் கலந்துகொள்பவர்கள் வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் 11.15 மணிக்குள் முன் பணமாக ரூ.1000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பண தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதைையும் பெற்றுக்கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை நகர் (ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம்) மற்றும் ஜிஎஸ்டி சான்று நகர் மற்றும் அங்கீகார கடிதம் (நிறுவனத்திற்காக கலந்து கொள்பவர்கள்) ஆகியவற்றை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்