உளவு துறை ெபண் அதிகாரியின் மகள் தூக்கிட்டு தற்கொலை: டெல்லி போலீசார் அதிர்ச்சி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் கம்லா மார்க்கெட் பகுதியில் வசிக்கும் உளவு துறை பெண் அதிகாரியின் 20 வயதுடைய மகள் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார், வீட்டில் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அதிகாரியின் மகள் இறந்து கிடந்தார். அதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய ேபாலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அவரது தந்தை உளவு பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்ததால், அவரது தாயாருக்கு கருணை அடிப்படையில் உளவு பிரிவில் பணி வழங்கப்பட்டது. தாயும், மகளும் அரசு விடுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பட்டப்படிப்பு படித்து வந்த உளவுத்துறை அதிகாரியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீட்டில் தற்கொலைக் குறிப்பு கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் யார் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. தனது தாயிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ளார். தான் மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாகவும், அதனால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

Related posts

அரசு பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடல்

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன