ஒருங்கிணைந்த பொறியியல் பணி; 2ம்கட்ட நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வை நடத்தியது. தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வு (இரண்டாம் கட்டம்) மற்றும் கணினிவழிச் சான்றிதழ் சரிபார்ப்பு (இரண்டாம் கட்டம்) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 9 காலி பணியிடங்களுக்கு 27 பேர் நேர்முக தேர்வு (இரண்டாம் கட்டம்) தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பதவிக்கான கணினிவழிச் சான்றிதழ் சரிபார்புக்கு 9 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை

ஆந்திராவில் அனந்தபுரம், திருப்பதியில் நடந்த இருவேறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்