இலங்கை அரசின் தூண்டுதலில் கடற்கொள்ளையர் தாக்குதல்: அன்புமணி குற்றச்சாட்டு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாமக தலைவர் அன்புமணி நேற்று அளித்த பேட்டி: பட்டாசு ஆலை விபத்தில் பலியாகும் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்திய கடல் எல்லையில் கடல் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி வருகிறார்கள். ஒன்றிய அரசு இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும் மனநிலையில் ஒன்றிய அரசு இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை கருத்தில் கொண்டு குவாரிகளை அரசே நடத்தி அதன் வருவாயை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது