இன்ஸ்டாகிராம் நட்பு பாதியில் முறிந்ததால் ஒன்றாக இருந்த போட்டோக்களை அனுப்பி மாஜி காதலியின் திருமணத்தை தடுக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது

அண்ணாநகர்: இன்ஸ்டாகிராம் காதல் பாதியில் முறிந்ததால் மாஜி காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்த தன்னுடன் ஒன்றாக இருந்த போட்டோக்களை அனுப்பி மிரட்டிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அரும்பாக்கம் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; நான், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 5 வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(24) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதன்பிறகு பாலாஜி மீது சந்தேகம் ஏற்பட்டதுடன் அவரது நடவடிக்கை சரியில்லாததால் கடந்த 2 வருடமாக பேசுவதை நிறுத்தி விட்டேன். இதன்பிறகு எனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதுபற்றி தெரிந்த பாலாஜி எனக்கு தினமும் போன் செய்து ‘’என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் முன்பே நம்ப காதல் செய்தபோது எடுத்த போட்டோக்களை நிச்சயதார்த்தம் ஆன மாப்பிள்ளைக்கு அனுப்பி விடுவேன்’’ என்று மிரட்டியதுடன் அந்த படங்களை மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். இதனால் எனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. என்னை மிரட்டிவரும் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்ததுடன் அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு பாலாஜி வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பாலாஜி கூறுகையில்,’’தான் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தநிலையில் கடந்த 2 வருடமாக என்னிடம் பேசாததுடன் எனது போன் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டார். இதன்பிறகு பேசுவதற்கு பல முறை முயற்சித்தும் முடியவில்லை. இதனால் நேராக காதலி வீட்டுக்கு காத்திருந்தேன். ஆனால் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அப்போதுதான் வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது தெரியவந்தது. இதனால்தான் தன்னுடன் இருந்த போட்டோக்களை அனுப்பிவைத்தேன்’ என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து பாலாஜி கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

பொன்னேரி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு