ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரிகள் ஆய்வு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளிலும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் கழிவுநீர் கால்வாய், பேவர்பிளாக் சாலை, ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மின்மோட்டார், பைப்லைன் அமைத்தல், சிறுபாலம், கல்வெர்ட் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம், மீசரகாண்டபுரம், எஸ்.வி.ஜி புரம் உள்பட சில ஊராட்சிகளில் நடைபெற்று வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேலு ஆகியோர் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்நிலையில், அம்மையார்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ..45 லட்சம் மதிப்பில் நடைபெறும் சுப்பிரமணியர் குளம் மேம்படுத்தும் பணி, காமராஜர் தெருவில் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ..11.21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், கலைச்செல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோல் ராஜா நகரம், மீசரகாண்டாபுரம், ஆர்.கே.பேட்டை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய், கட்டிடப்பணி, பேவர் பிளாக் சாலை பணிகள் தரமான முறையில் கட்டப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இப்பணிகளை தரமான முறையில் விரைவில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினர்.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து