இன்னல் தரும் இறுக்கமான உள்ளாடைகள் வேண்டாமே!

பெண்களுக்கு ஆடை அலங்காரம் என்றாலே பிரியம் தான். உடல் அமைப்பை கட்சிதமாக அழகாக காட்டும் ஆடைகளையே விரும்புவார்கள். இதனால் உள்ளாடைகளையும் இறுக்கமாக அணிகிறார்கள். உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் பல இன்னல்களை சந்திப்பார்கள். இருப்பினும் அவர்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள். இப்படி இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பார்க்கலாம்.பெண்கள் கச்சிதமாக ஆடை அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாகத் தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் பிறப்புறுப்புப் பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவது உண்டு. இதனால் நாள் கணக்காக அரிப்பு ஏற்படும். எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பது இல்லை.பெண்களுக்கு இரத்த ஓட்டம் தடைப் படுதல், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல உடல்நல பிரச்னைகளை ஏற்படுகின்றன. சீரான இரத்த ஓட்டம் தடைப்படுகிறது.

இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன. சீரான இரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்கள் இறந்து போகக் கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது.தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம். சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிற்றும் பகுதியை மிகவும் கடினமாக உணரச் செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டமும் தடைப்படுகிறது. இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர்க் குழாய்த் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு. இதற்கு காரணம் பெண்ணுறுப்பில் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே. இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாக அமைகிறது.

முக்கியமாக நைலான், பாலிஸ்டர்,போன்ற துணிகளில் உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்கவும். சிவந்த தடுப்புகள் சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சுத்தமான பருத்தித் துணிகளில் நல்ல பிராண்டுகளில் உள்ளாடைகள் அணிவதும் அவசியம். குறிப்பாக உள்ளாடைகள்தானே என பலரும் தயங்கிக்கொண்டு வீட்டின் வெளிப்புறத்திலோ, அல்லது வெயில்படும்படியோ அலசி உலர்த்துகிறார்கள். மாறாக மறைவான குளிர்ந்த காற்று வீசும் இடத்தில் உள்ளாடைகளை உலர்த்துவதால் பூஞ்சைகள் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம். வாரம் முழுக்க சாதாரணமாக துவைத்தாலும் மாதம் ஒருமுறையாவது சூடான நீரில் உள்ளாடைகளை ஊறவைத்து துவைத்து நன்கு வெயிலில் உலர்த்துவதும் அவசியம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுவதும் மிக அவசியம். போலவே மாதவிடாய் காலங்களில் தனியான உள்ளாடைகள் பயன்பாடும் பழக்கப் படுத்திக்கொள்ளுங்கள். இரவில் எவ்வித உள்ளாடைகளும் தேவையில்லை. தூங்கும் பொழுதாவது நம் உடல் உறுப்புகள் காற்றோட்டத்துடனும், எவ்வித இறுக்கமும் இல்லாமல் தூங்குவது நல்லது. கோடைகாலம் துவங்கிவிட்டது உள்ளாடைகள் இறுக்கத்தால் வியர்வை அலர்ஜி, அரிப்புகள், கொப்புளங்கள் என உருவாகலாம், எனவே வசதியான, நல்ல காட்டன் உள்ளாடை களைப் பயன்படுத்துங்கள்.

 

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?