செங்கல்பட்டு அருகே சேதமான மேம்பால தடுப்பு சுவர்: விபத்தை தடுக்க உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் மேம்பால தடுப்பு சுவர் உடைந்துள்ளதால், அங்கு வாகன விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு நிலவி வருகிறது. இதனால் அந்த தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு அருகே சென்னை‌-திருச்சி‌ செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் தென்மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இங்குள்ள பரனூர் மேம்பாலத்தை ஒட்டி சுமார் 40 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது.

இந்த மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் அனைத்தும் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இவ்வழியே இரவு நேரங்களில் உள்ள மின்விளக்கு வசதி இல்லாத பரனூர் மேம்பாலம் வழியே ஏராளமான வாகனங்கள் வேகமாக வருகின்றன. அவை எதிர்வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, மேம்பால தடுப்பு சுவர் உடைந்து கிடப்பதால், அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயநிலை அதிகரித்துள்ளது. மேலும், பரனூர் மேம்பாலம் விபத்து ஏற்படும் பகுதி என்பதால், அது வளைவான மேம்பாலம் என்பதால், தடுப்பு சுவர் பாதுகாப்பு இன்றி, விபத்து அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

எனவே, பரனூர் மேம்பாலத்தில் வளைவான பகுதிகளில் சேதம் அடைந்திருக்கும் தடுப்பு சுவர்களை அகற்றி, அங்கு புதிதாக தடுப்பு சுவர் கட்டி சீரமைத்து, வாகன விபத்துகளை தவிர்க்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!