கடைக்குள் புகுந்து வாலிபருக்கு வெட்டு 4 பேர் சிறையில் அடைப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கடைக்குள் புகுந்து வாலிபரை வெட்டிய வழக்கில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் கன்னியம்மன் கோயில் மேம்பாலத்தின் கீழ் காய்கறி, மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது காய்கறி கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (22) வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 26ம் தேதி வெட்டுக்காலனியைச் சேர்ந்த 4 பேர் திடீரென காய்கறி கடைக்குள் நுழைந்து காய்கறி, வாட்டர் பாட்டில் ஆகியவற்றை ஓசியில் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். தர மறுத்த இளவரசனை மிரட்டிச் சென்றனர். விடுத்தார்கள். இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேஷ் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, மறுநாள் மீண்டும் கடைக்குள் புகுந்த அந்த கும்பல் இளவரசனை வெட்டிவிட்டுச் சென்றது. இதில் படுகாயமடைந்த இளவரசன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி பஜார், ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அந்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இதில் ஏற்கனவே வெட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்த விஜி (22) என்பவரை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் (எ) பார்த்தா (23), எழில் (22) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர். 4 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்