கர்நாடகாவில் வருமான வரி ரெய்டில் ரூ.94 கோடி சிக்கியது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும்: சதானந்த கவுடா வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூருவில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.94 கோடி ரொக்கம், ரூ.8 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சுரண்டலின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா வலியுறுத்தியுள்ளார். அவர் பேசுகையில், ‘கர்நாடகாவை சுரண்டி, அந்த பணத்தை திரட்டி 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு நிதி வழங்குவதே காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம். கர்நாடகாவில் இப்போது நடக்கும் சுரண்டலை போல், நாட்டின் எந்த மாநிலத்திலும் இதற்கு முன் எப்போதும் நடந்ததே இல்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை