இன்னல்கள் போக்கும் இன்பியூஸ்ட் நீர்!

உணவிற்குப் பிறகு உப்புசம், வயிற்று வலி அல்லது தசை பிடிப்புகளை ஒரு சிலர் உணர்கிறார்கள். செரிமானம் சீராக நடைபெறாத நிலையில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் குறைவாக சாப்பிடும் பொழுதும் இது போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் உண்டாகின்றன. வயிற்று உப்புசத்திற்கு தீர்வு தரும் பல எளிமையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இருப்பினும் இவை தொடரும் பொழுது மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. வயிற்று உப்புசத்திற்கான எளிமையான தீர்வுகளில் ஒன்று ‘இன்பியூஸ்ட் நீர்’.

இன்பியூஸ்ட் நீரின் நன்மைகள்

*உணவிற்குப் பிறகு ஏற்படும் உப்புசத்தை போக்க எலுமிச்சை, வெள்ளரி, இஞ்சி, சியா விதைகள் மற்றும் புதினாவை கொண்டு இன்பியூஸ்ட் தண்ணீர் செய்து குடிக்கலாம். குடிக்கும் நீரில் இது போன்ற ஆரோக்கியமான மூலிகைகள் மற்றும் விதைகளை சேர்த்து இந்த இன்பியூஸ்ட் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான விதைகளை குடிநீரில் சேர்க்கும் பொழுது அதன் சுவையும் தரமும் மேம்படும்.
*இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
* புதினா உணவு குழாயின் தசைகளை தளர்த்தி உப்புசம் மற்றும் வாயுவை குறைக்கிறது.
*வெள்ளரிக்காய் வயிற்றை குளிர்வித்து, உடலை நீரோற்றமாக வைத்துக் கொள்வதுடன், அஜீரண பிரச்னையில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது. சியா விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம். இது மலச்சிக்கலை குறைக்கிறது.
*எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான சாறுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த தண்ணீரை பருகிஉடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றலாம். இது உணவிற்குப் பிறகு ஏற்படும் வயிற்று உப்புசத்தை குறைக்கிறது. கோடை காலத்தில் இந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிக்கலாம்.
சில இன்பியூஸ்ட் நீர் இதோ!
*வெள்ளரி 4 துண்டுகள், இஞ்சி அரை அங்குலம், சியா விதைகள் – 1 டீஸ்பூன், எலுமிச்சை 4 துண்டுகள், புதினா – 10 இலைகள். தண்ணீர் 800 மிலி. சியா விதைகளை சில நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலில் சியா விதைகள் மற்றும் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். இந்த நீரை 2-3 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். உணவிற்குப் பிறகு ஏற்படும் வயிற்று உப்புசத்தை போக்க இந்த நீர் உதவும்.
*தோலுடன் 2 எலுமிச்சை. ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை தோலுடன் சிறியதாக வெட்டி, போட்டு, ஒரு 12 மணி நேரம் கழித்து அந்த எலுமிச்சை தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும். தோல் வறட்சியாக இருப்பவர்கள் இதை தினம் எடுத்து கொள்வதால், தோலின் வறட்சி நீங்கி, ஈரப்பதத்துடன் இருக்கும்.
*எலுமிச்சை ½ , ஸ்ட்ராபெர்ரி 2, கிவி 1. முன்றையும் தோலுடன் நறுக்கிக் கொண்டு அப்படியே நீரில் நான்கு மணி நேரங்கள் போட்டு வைத்திருந்து அந்த நீரை அருந்தலாம். உடலுக்கு தேவையான ஈரச்சத்து, நச்சு நீக்கம், அஜீரணம் சீராதல், உள்ளிட்ட பல பயன்கள் இந்த நீரில் உண்டு. மீண்டும் பழச்சுவை மாறுவதற்குள் நீரை நிரப்பி மீண்டும் கூட பயன்படுத்தலாம். மார்க்கெட்டில் இதற்கெனவே இன்பியூஸ்ட் வாட்டர் பாட்டில்கள் ஏராளமான வகைகளில் விற்பனைக்கு உள்ளன.
*லவங்கப் பட்டை 2 துண்டுகளை ஒரு வாட்டர் பாட்டில் நீரில் போட்டு வைத்து அருந்த உடல் எடை, தேவையற்ற கொழுப்பு நீங்கும். மேலும் கர்ப்பபை ஆரோக்கியத்திற்கு பேருதவி புரியும்.
*மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன். இரண்டையும் நீரில் அவ்வப்போது கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் சரியாகும். மேலும் அஜீரணம், உணவுக் குழாய் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
– பி.பாலாஜிகணேஷ்

Related posts

வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்