சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டார். 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழி அனுப்பி வைத்தனர். நாளை நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை எட்ட முதலமைச்சர் தீவிரம் காட்டி வருகிறார்.