அரசு, தனியார் தொழிற்நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: அரசு மற்றும் தனியார் தொழிற்நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பம் செய்யலாம் என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: அரசு மற்றும் தனியார் தொழிற்நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in < http://www.skilltraining.tn.gov.in > என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவு விவரங்கள் தெரிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in < http://www.skilltraining.tn.gov.in > என்ற இணையதளத்தினை பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது, தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகம். முடுகாலனி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடகருவிகள, ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியை வழங்கப்படுகிறது, மேலும் பயிற்சியினபோது தொழிற்நிறுவனங்களில் உதவித்தொகையுடன் வழங்கப்படும், விண்ணப்பக்கட்டணம்ரூ.50ஐ விண்ணப்பதாரர் டெபிட்/கிரெடிட்/யுபிஐ வாயிலாக செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், எண் 55, கத்திவாக்கம்நெடுஞ்சாலை, சென்னை – 600 021என்ற விலாசத்திலும் 044-25201163 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்