நாட்டின் தூய்மையான நகரங்கள் இந்தூர், சூரத் முதலிடம்: 3வது இடத்தில் நவி மும்பை

புதுடெல்லி: தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பு திட்டத்தின்கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவிலுள்ள தூய்மையான நகரங்கள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வௌியிட்டார். இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் இந்தூர், குஜராத்தின் சூரத் ஆகிய நகரங்கள் முதலிடம் பிடித்துள்ளன.

இந்தூர் தொடர்ந்து 7வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் நவி மும்பை 3வது இடம், ஆந்திராவின் விசாகப்பட்டினம் 4ம் இடம், டெல்லி மாநகராட்சி 7வது இடம், தெலங்கானாவின் ஐதராபாத் 9வது இடம் பிடித்துள்ளன. சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்கள் 2வது இடத்தையும் பெற்றுள்ளன.

Related posts

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு