இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: இந்தோனேஷிய அதிபர் பிராபோவோ, பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இருவரும் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தோனேஷியாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிராபோவோ சுபியாண்டோவிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பை பெற்றதில் மகிழ்ச்சி. அதிபர் பதவிக்கு வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நாங்கள் இந்தியா-இந்தோனேஷியா இடையே விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி