இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.7 பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன் ஜனவரி 4ம் தேதியும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் செவ்வாய்க்கிழமை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் முறையே அட்சரேகை: 4.75 மற்றும் தீர்க்கரேகை: 126.38 இல் காணப்பட்டது என்றும் 80 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுளளது. கடந்த வியாழன்(ஜன.04) அன்று இந்தோனேசியாவின் பலாய் புங்குட்டின் பகுதியில் 98 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. அதன் ஆழம் பூமிக்கு அடியில் சுமார் 221 கி.மீ. நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி