இந்தோனேசியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7-ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே கடலில் இன்று (ஆகஸ்ட் 29) அதிகாலை 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியது. இந்த நிலநடுக்கமானது இந்தோனேசியாவின் மாதரத்தில் இருந்து வடக்கே 203 கிமீ தொலைவிலும், பூமியின் மேற்பரப்பில் இருந்து 516 கிமீ ஆழத்திலும் இருந்தது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. எனினும், கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு