பணி: Constable (Kitchen Services)
மொத்த இடங்கள்: 819 . (ஆண்- 697 (பொது-389, எஸ்சி-41, எஸ்டி-60, ஒபிசி-138, பொருளாதார பிற்பட்டோர்-69).
பெண்- 122 இடங்கள் (பொது-69, எஸ்சி-7, எஸ்டி-10, ஒபிசி-24, பொருளாதார பிற்பட்டோர்-12).
வயது: 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அளிக்கப்படும் உணவு உற்பத்தி படிப்பு சான்றிதழ் அல்லது அந் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.21,700-69,100.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
உடல் திறன் தேர்வு, நிர்ணயிக்கப்பட்ட உடல் எடை, உயரம் அளத்தல், எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரி பார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.10.2024.