தனி அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கு கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது? தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியானது. இந்த உத்தரவை எதிர்த்து சின்னசாமி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால்,அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பதவிக்காலம் தொடங்குகிறதா, முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து தொடங்குகிறதா என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை நியமித்த உத்தரவை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு