கனடாவில் இந்திராகாந்தி படுகொலை போஸ்டர்கள்

ஒட்டாவா: கனடாவின் வான்கூவரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து கனடா பொது பாதுகாப்பு, ஜனநாயக அமைப்புகள் மற்றம் வெளி விவகார அமைச்சர் டொமினிக் ஏ லெப்லாங்க் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த வாரம், வான்கூவரில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி படுகொலையை சித்தரிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக செய்திகள் வந்தள்ளன. கனடாவில் வன்முறையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என கூறி உள்ளார். இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா கூறுகையில், ‘‘ கனடா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது