நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு


டெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கபப்ட்டுள்ளது. இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விமான நிலையங்களில் செக்-இன் செய்வது தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்காக வருந்துகிறோம். விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக தங்கள் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு