இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ராஜசேகர ரெட்டியின் யாத்திரையே காரணம்: ராகுல் புகழாரம்

புதுடெல்லி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘ராஜசேகர ரெட்டி மக்களுக்கான உண்மையான தலைவர். ஆந்திரா மற்றும் நாட்டு மக்களின் மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்புக்கான அவரது மன உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவை வழிகாட்டியாக இருக்கின்றன. நான் தனிப்பட்ட முறையில் ராஜசேகர ரெட்டியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான எனது இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு, 2003ல் ஆந்திரா முழுவதும் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட யாத்திரையே காரணம். ராஜசேகர ரெட்டி கடும் வெயிலிலும் மழையிலும் நடந்து செல்லும் காட்சிகள் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ஆந்திரா மக்களுக்காகவே வாழ்ந்த ராஜசேகர ரெட்டி இன்று இருந்திருந்தால் ஆந்திரா துன்பங்களையும், சிரமங்களையும் சந்திக்காமல், முற்றிலும் மாறுபட்ட இடமாக இருந்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.’’ என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு