இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்: ஐநா அறிக்கையில் தகவல்

நியூயார்க்: 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.3 சதவீதமாக இருக்கும் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான பொருளாதாரம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2024ம் ஆண்டில் தெற்காசியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.2 சதவீதம் அதிகரிக்கும். உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா வலுவாக உள்ளது. வலுவான உள்நாட்டு உற்பத்தி தேவை மற்றும் உற்பத்தி, சேவை துறைகளின் வளர்ச்சி காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியானது 6.2 சதவீதமாக இருக்கும். நெகிழ்வான தனியார் நுகர்வு மற்றும் பொது முதலீடு ஆகியவற்றினால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இது கடந்த ஆண்டு 6.3 சதவீதத்தைவிட சிறிது குறைவாகும். 2025ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.6சதவீதமாக இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஆறு சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. இது 2024 மற்றும் 2025ம் ஆண்டிலும் தொடரும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி