இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்

ஹராரே: இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி வரும் 06ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டு சென்றது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் வீரர் சிக்கந்தர் ராசா தலைமையில் அந்த களமிறங்க உள்ளது.

புதிதாக மகுடம் சூடிய டி20 உலகக் கோப்பை 2024 சாம்பியனான இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடருக்கான இளம் ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாக செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா 2013 முதல் 86 டி20 போட்டிகளில் விளையாடி 1,946 ரன்களை குவித்துள்ளார்.

ஜிம்பாப்வே டி20 உலகக் கோப்பை 2024க்கு தகுதி பெறத் தவறிவிட்டது. இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் தலைமையில் சிறப்பான ஜிம்பாப்வே அணியை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஈடுப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுதா, ஆன் மைக்யூர்ஸ், ப்ளெஸ்ஸிங் முஸரபனி, ப்ளெஸ்ஸிங் முஸாரபானி ரிச்சர்ட் ங்கராவா, மில்டன் ஷும்பா.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்