இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு

கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியின் புதிய கேப்டனாக சரித் அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வனிந்து ஹசரங்க பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சரித் அசலங்கா இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ஹசரங்காவின் தலைமையின் கீழ் இலங்கை அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்திற்கு எதிரான ஒரே போட்டியில் மட்டுமே வெற்றி பெட்ராகால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்பட்டபோது, ​​இலங்கையின் டி20 போட்டியில் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா அணியில் இருந்து முற்றிலும் வெளியேறிய நிலையில், அசலங்கா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சதீர சமரவிக்ரம மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோரும் அணியில் இருந்து வெளியேறினர். அதற்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்றவர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது. பிப்ரவரி 2022 க்குப் பிறகு தனது முதல் டி20 போட்டியில் விளையாடும் வரிசையில் அனுபவமிக்க தினேஷ் சண்டிமாலும் மீண்டும் களமிறங்குகிறார்.

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகளும் பல்லேகலேயில் நடைபெற உள்ளது. முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்கள் ஜூலை 28 மற்றும் ஜூலை 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இலங்கை அணி: சரித் அசலங்கா (c), பாதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, சமிந்து தீக்ஷனா, மத்ரவான் விக்ரமசிங் துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ

Related posts

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்

தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப்படுத்திய இலங்கை அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா